தண்ணீர் தொட்டியில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு
வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்தே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், அங்கிருந்து 29 தோட்டாக்களைக் கொண்ட வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கியை அந்த இடத்திற்குக் கொண்டு வந்து போட்ட சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக வாழைத்தோட்டம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு சந்திவெளி காவல்துறை பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை நேற்று (18) மீட்கப்பட்டுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பகுதியில் கைவிடப்பட்டிருந்து மோட்டார் குண்டை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் உதவியுடன் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை வெடிக்க வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |