இலங்கை வங்கியின் 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கை - ரணிலிடம் கையளிப்பு
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kiruththikan
இலங்கை வங்கியின் 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கை இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேராவினால் இன்று (18) நிதி அமைச்சில் வைத்து பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை வங்கியின் www.boc.lk மற்றும் பங்குச் சந்தையின் www.cse.lk இணையத்தளங்கள் ஊடாக 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பார்வையிடலாம்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரத்துறையினர் தெரிந்துகொள்வதற்காக மேற்படி அறிக்கை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கை வங்கியின் நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேக்கா, பிரதான நிதி அதிகாரி ருவன் குமார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி