நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தீபாவளி கொண்டாட்டம்
மட்டக்களப்பு
தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இந்து ஆலயங்களிலும் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இன்று காலை வரலாற்று பிரசித்தி பெற்ற ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும். தீபாவளியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச ரிவி சாந்த கணேச குருக்கள் தலைமையில் பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது.
இதில் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தீபத் திருநாளை முன்னிட்டு ஆலயத்தில் தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் இன்று தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளது.
ஹட்டன்
மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை 31.10.2024 அன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.
ஹட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஷன் மதுரன் குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் ஆலய பிரதம குருக்கல் கீர்த்தி சிறீ வாசன் குருக்கல் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சகல இந்து ஆலயங்களிலும் தீபாவளி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா
தமிழ் மக்களின் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை முன்னிட்டு விசேட பூஜைகளும் வழிபாடுகளும் இன்று (31) கிண்ணியா, ஆலங்கேணி பிள்ளையார் கோயிலிலும்,ஈச்சந்தீவு ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்களிலும் இடம்பெற்றுள்ளன.
தீமைக்கு எதிராக நன்மை
தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா. இது தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் பண்டிகையாகும், மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் மகிழ்ச்சியுடனும் வண்ணங்களுடனும் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபாவளிப் பண்டிகையானது உங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேற்றி சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாக அமையவேண்டும் என அனைத்து வாசகர்களுக்கும் ஐபிசி தமிழ் செய்தித் தளம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தீபங்களின் ஒளி உங்கள் வாழ்வில் நம்பிக்கை, நலன், நறுமணம் என அனைத்தையும் பரப்பிட உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.
ஐபிசி தமிழ் வாகசர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!