அவுஸ்ரேலியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
covid19
australia
happy news
travel band
By Sumithiran
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை அடுத்து தனது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான பயணத்தடையை விதித்திருந்த அவுஸ்ரேலிய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தடையை தளர்த்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையிலேயே இந்த முடிவு என விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய நிர்வாகம் பயணத்தடையை நீக்குவதனால் 160,000 மாணவர்கள் உட்பட 235,000 வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலியவுக்கு திரும்புவார்கள் என தெரியவந்துள்ளது.
டிசம்பர் 1ம் திகதி முதல் பயணத்தடை நீக்கப்படுவதாக இருந்த நிலையில், ஓமிக்ரோன் பரவல் காரணமாக இரண்டு வார காலம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்