இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 90,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 21,156 ஆகும்.
நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை
டிசம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 93,031 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ரஷ்யா, பிரித்தானியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதற்கமைய, இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,196,624 ஆகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்