துன்புறுத்தல்கள் கண்டிக்கத்தக்கது! எதிர்க்கட்சி காட்டம்
சிறுவர் கடத்தல், சிறுவர் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளுடன் தமது கட்சியால் இணைந்து பணியாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறுவர்கள் மீதான அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தமது கட்சி கண்டிக்கும் என்றும் அதுவே கட்சியின் நிலைப்பாடு.
கூட்டணியில் கட்சிகளுக்கு சொந்த கொள்கைகள் இருந்தாலும் கட்சியின் கொள்கையை யாராவது மீறுவார்களாயின் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது.
இருப்பினும், பதியுதீனின் வீட்டில் இடம்பெற்ற சிறுமியின் மரணம் குறித்து நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.