யாழ்ப்பாணம் வந்தடைந்தார் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன்
                                    
                    Rambha
                
                                                
                    Tamannaah
                
                                                
                    Jaffna
                
                                                
                    Hariharan
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    NORTHERN UNI இன் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக இன்றைய தினம் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பலாலி விமானநிலையம் ஊடாக இன்று (07.02.2024) 12 மணியளவில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் பெப்ரவரி (9)ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
குறித்த இசை நிகழ்ச்சிகாக நேற்றையதினம்(6) தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் வருகை தந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடன இயக்குனர் சாண்டி, யோகிபாபு, நடிகை தமன்னா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோரும் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 








 
                                        
                                                                                                                         
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        