சஜித் தரப்புக்குள் காரசார மோதல்!! ஒருவர் வெளியேற்றம்
சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று மாலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் ஒன்று தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சக்தி இதனை தாமதப்படுத்தினால், நான் சுயாதீனமாக இருக்க முடிவு செய்துள்ளேன். அத்தோடு, அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறையையும் ஆதரிக்கிறேன்.
தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவது சிறந்தது தான். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. இதை நாம் எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாடு பாதிக்கப்படும்” என்றார்.
இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மிகவும் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
