மன்னாரில் இருவருக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறைத்தண்டனை
மன்னார் (mannar)பிரதேசத்தில் 183 கிலோ கிராம் கஞ்சாவை பாரவூர்தியில் கொண்டு சென்ற குற்றவாளிகள் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.
முதலாம் குற்றவாளி தலைமறைவாகி இருந்த நிலையில் முதலாம் குற்றவாளி இன்றிய வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரண்டாம் எதிரி வழக்கில் முன்னிலையாகி இருந்தார்.
கடூழிய சிறைத்தண்டனை
வழக்கு விசாரணைக்கு பின்னர் எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வழக்கு தொடுனர் தரப்பில் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் முதலாம் எதிரிக்கு இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு தலா 4 வருட கால அடிப்படையில் 8 வருட சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
இரண்டாம் எதிரி சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணி தினேஷனின் தண்டனை தணிப்பு சமர்ப்பணத்தை கருத்திற் கொண்டு இரண்டாம் எதிரிக்கு இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு தலா 2 வருட கால அடிப்படையில் 4 வருட சிறைத்தண்டனையும், தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. குறித்த இரு சிறைத் தண்டனைகளும் ஏக காலத்தில் அனுபவிக்கும் வகையில் இரண்டாம் எதிரிக்கு விதிக்கப்பட்டது.
வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

