கோபா குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா - சஜித்தால் தொடரும் இழுபறி
கோபா (COPA) குழுவின் தலைமைப் பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நியமிக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் கோபா குழுவின் தலைமைப் பதவியை எதிரணிக்கு வழங்குவதற்கு அநுர அரசு தீர்மானித்துள்ளது.
அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா (COPA) குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியல் ஊடாக சபை
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தில் கோபா குழுவின் தலைமைப் பதவியை ஹர்ஷ டி சில்வாவை ஐக்கிய மக்கள் சக்தி நியமிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், எரான் விக்கிரமரத்னவை தேசியப் பட்டியல் ஊடாக சபைக்குக் கொண்டு வந்து, அவரை கோபா தலைவராக்குவதற்குரிய பரிசீலனைகளும் இடம்பெறுவதாகத் உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஹர்ஷ டி சில்வாவுக்கும் இடையில் மனக் கசப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று அண்மைக்காலமாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.