ஐ.தே.கவின் தலைமை சஜித்துக்கு - ரணிலுக்கு பறந்த கோரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு (Sajith Premadasa) வழங்கப்பட்டால் மாத்திரமே இரு தரப்பு இணைவு என்பது சாத்தியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
இதற்கான விட்டுக்கொடுப்பை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremasinghe) செய்யாத வரை இணைவு என்பது சாத்தியப்படமாட்டாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் உள்ளேன்.
கட்சியின் தலைமைப் பதவி
இந்த இணைவு என்பது அரசியல் பிரசாரமாக இருக்கக்கூடாது. உண்மையான இணைவாக இருக்க வேண்டும்.
அப்படியானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை பொறுப்பேற்குமாறு சஜித்துக்கு, ரணில் அழைப்பு விடுக்க வேண்டும்.
அவ்வாறு அல்லாமல் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதால் நடக்கப்போவது எதுவும் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் உண்மையான இணைவுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். மாறாக தோல்வியை மறைப்பதற்காக இணைவு பற்றி பேசி பயன் இல்லை என ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |