யுத்தம் ஆரம்பித்து மூன்று நாட்களில் இஸ்ரேல் இருளில் மூழ்கிவிடும்
இஸ்ரேலியப் படைகளுக்கும், லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையில் முழு அளவிலான யுத்தம் ஆரம்பமாகலாம் என்று பரவலாகக் கூறப்பட்டுவருகின்ற நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் Hassan Nasrallah கடந்த வாரம் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை உலகின் கவனத்தை பரவலாக ஈர்த்து வருகின்றது.
'இஸ்ரேலுடன் ஒரு யுத்தம் ஏற்பட்டால், எந்தவித வரையறையோ அல்லது எந்தவித விதிமுறைகளோ இல்லாமல் இஸ்ரேலுடன் ஹிஸ்புல்லாக்கள் யுத்தத்தை மேற்கொள்ளுவார்கள் என்றும் அவர் அறைகூவல் விடுத்திருந்தார்.
இஸ்ரேல் மீது தரை வழியாக மாத்திரமல்ல, வான் வழியாகவும், கடல் வழியாவும் கூட தாக்குதல் நடாத்துவோம் என்றும் எச்சரித்துள்ளார் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் Hassan Nasrallah.
அது மாத்திரமல்ல, சைப்பிரஸ் நாடு இஸ்ரேலுக்கு தளம் கொடுத்தால், சைப்பிரஸ் மீதும் தாக்குதல் நடாத்துவோம் என்றும் அவர் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஹிஸ்புல்லாக்கள் விடுத்து வருகின்ற எச்சரிக்கைகளின் பின்னணி பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |