கோர விபத்துக்குள்ளான பேருந்து: 5 வயது சிறுவன் உட்பட மூவர் பலி! பலரின் நிலை கவலைக்கிடம்
புதிய இணைப்பு
ஹட்டன்(Hatton) - மல்லியப்பு பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண் ஒருவரும் – பெண் ஒருவரும்) மொத்தமாக மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், பேருந்தில் சுமார் 54 பயணிகள் வரை பயணித்த நிலையில், 40 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
ஹட்டன்(Hatton) - மல்லியப்பு பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று(21.12.2024) காலை இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துச் சம்பவம்
இதன்போது, பேருந்தில் சுமார் 54 பயணிகள் பயணித்த நிலையில் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கும் வட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |