ஹட்டனில் மூடப்படும் பிரதான பேருந்து தரிப்பு நிலையம்
Sri Lanka
Hatton
By Shadhu Shanker
ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், பேருந்து தரிப்பு நிலையம் மூடப்படவுள்ளதாக பேருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து தரிப்பிடம் குண்டும் குழியுமாக காணப்பட்டமையினால் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் விளைவாகவே தற்போது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேருந்து தரிப்பிடங்கள் மாற்றம்
இப்பணிகளின் காரணமாக குறித்த பிரதேசங்களுக்குச் செல்லும் பேருந்து தரிப்பிடங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய ஹட்டன் பொகவந்தலாவை, மஸ்கெலியா, ஒஸ்போன், நோட்டன், காசல்ரீ, சாஞ்சிமலை, ஓல்டன், போடைஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் ஹட்டன் தபால் நிலையத்திற்கருகில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 16 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்