அநுரவை பதற வைத்த அமெரிக்க உளவு பிரிவின் அதிரடி நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பிலான தகவலை வெளிப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், தற்போது அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள அறிக்கை பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் சிலவற்றிலும், காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.
இதில், வெளிநாட்டவர்கள், காவல்துறை உள்ளிட்ட குறைந்தது 272 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அத்துடன், இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று மூன்று நாட்களக்கு பின்னர் இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க உளவு பிரிவின் சிறப்பு தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை அமெரிக்காவுக்கு எடுத்து சென்றுள்ளதாக தெரிவிப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலும் பல விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
