ஏமனின் தைஸ் நகரில் தீவிரமடையும் சுகாதார நெருக்கடி: உயிர் ஆபத்தில் பலர்
ஏமன் நாட்டின் தைஸ் நகரில் சுகாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டின் சுகாதார அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹவுதி அமைப்பினரின் தொடர் முற்றுகைக்கு மத்தியில் தைஸ் நகரில் மருந்து, எரிபொருள் மற்றும் ஏனைய மருத்துவம் சார்ந்த பொருட்களின் கையிருப்பு அபாயகரமான நிலையை எட்டியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையானது, சுமார் 1,110 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 190இற்கும் மேற்பட்டோரின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பேரின் உயிர் ஆபத்தில்
வரவிருக்கும் மருத்துவப் பேரழிவு குறித்து எச்சரித்த அந்த அலுவலகம், பல பேரின் உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும் விநியோகப் பாதைகளை திறக்கவும் நோயாளிகளுக்கும் உதவிகளுக்கும் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஹவுதிகள் தங்கள் முற்றுகையைத் தொடர்வதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதைத் தடுப்பதாகவும் கூறியுள்ள ஏமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம், தைஸில் 'உடனடி சுகாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவு' ஏற்படவிருப்பதாக எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |