மனைவியுடன் சேர்ந்து ஹவாய் தீவு நோக்கி பயணமாகவுள்ள ஜோ பைடன் - காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய தீர்மானம்!

Joe Biden United States of America
By Kathirpriya Aug 16, 2023 12:00 PM GMT
Report

ஹவாய் தீவில் தற்போது காட்டுத்தீ பரவி பாரிய சேதங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் ஹவாய் தீவு நோக்கி பயணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹவாய் தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவான மவுய் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ உருவாகியது.

இடத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன் 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

ஒரு நகரமே தீக்கிரை

மனைவியுடன் சேர்ந்து ஹவாய் தீவு நோக்கி பயணமாகவுள்ள ஜோ பைடன் - காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய தீர்மானம்! | Hawai Wildfire Biden Says He And Lady Will Survey

இந்த காட்டுத்தீயால் மவுய் தீவு கடும் சேதமடைந்து ஒரு நகரமே தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"இந்த நிலையில் நானும் எனது மனைவியும் (ஜில் பைடன்) ஹவாய் செல்ல இருக்கிறோம், அங்கு செல்லும் நாங்கள் மவுய் காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அங்கு செல்ல இருக்கும் ஜோ பைடன் "எங்களால் மீட்புப்பணி, சுத்தப்படுத்தும் பணிகளுக்கு தடை ஏற்படுவதை விரும்பவில்லை" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமல்லாமல் அமெரிக்கா ஹவாய் தீவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என ஹவாயின் ஆளுநர் ஜோஷ் கிரீனிடம் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்த ஜோ பைடன், ஹவாய் மக்களுக்கு தேவைப்படும் ஒவ்வொன்றும், அவர்களை சென்றடையும் என்றும் கூறியுள்ளார்.

தகவல்கள் கண்டறியப்படவில்லை

மனைவியுடன் சேர்ந்து ஹவாய் தீவு நோக்கி பயணமாகவுள்ள ஜோ பைடன் - காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய தீர்மானம்! | Hawai Wildfire Biden Says He And Lady Will Survey

மவுய் தீவில் காட்டுத் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இன்னமும் முழுமையான தகவல்கள் கண்டறியபடவில்லை என்றும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பழமையான லஹைனாவில் ஏற்பட்ட தீ 85 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோ பைடன் இதற்கு முன்னர் சூறாவளி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை செய்துள்ளார்.

ஆனால், ஒஹியோவில் ரெயில் கவிழ்ந்து நச்சு ரசாயனம் வெளியேறியது, அந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.   

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025