காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள்

Sonnalum Kuttram
By Dharu Sep 19, 2026 12:33 AM GMT
Report

பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை , குறித்த பகுதியில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத்தான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றி , எவ்வித அனுமதிகளும் இன்றி சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு கொட்டப்பட்ட கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணித்திருந்தார்.

வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

பொதுமக்கள் அதிருப்தி

அத்துடன் வலி. வடக்கு பிரதேச சபையினரும் அப்பகுதிகளில் கழிவுகளை கொட்ட கூடாது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள் | Hazardous Waste Piling Up At Keerimalai

அவ்வாறான நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை சபையின் மாதாந்த கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்து , கீரிமலையில் கொட்டப்பட்ட குப்பைகள் மீள அள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

அதேவேளை நேற்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் , மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் , வலி.தெற்கு பிரதேச சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்டவர்கள் , வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுடன் இணைந்து குப்பைகள் கொட்டப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு , அவற்றை உடனடியாக வலி. தெற்கு பிரதேச சபையினர் மீள அள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் ஆபத்தான வைத்திய கழிவுகள் பெருமளவில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள் அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்ட போது பெருமளவான மருத்துவ கழிவுகள் பொதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கொட்டப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு புகைப்பட மற்றும் ஒளிப்பட ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளனர்.

கழிவுகளை இப்பகுதியில் கொட்ட வேண்டாம் என கடந்த இரு மாதங்களாக தாம் குரல் கொடுத்து வரும் நிலையிலும் , பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் கழிவுகள் அள்ள பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு , உள்ளூராட்சி ஆணையாளர் கழிவுகளை அள்ள உத்தரவிட்டுள்ள நிலையில் , அவற்றையெல்லாம் மீறி வலி. வடக்கு பிரதேச சபையினர் ஆபத்தான மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளமை படுமோசமான செயற்பாடு என வலி. வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

நாமலின் விளக்கமறியல் பின்னணியில் உள்ள ஒரே ஆதாரம்! மொட்டு தரப்பு வெளிப்படை

நாமலின் விளக்கமறியல் பின்னணியில் உள்ள ஒரே ஆதாரம்! மொட்டு தரப்பு வெளிப்படை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்