நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரான் பாசிக் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான இந்த வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் அழைக்கப்பட்டது.
மத்திய குற்றவியல் விசாரணை பணியகம்
இதன்போது, காவல்துறை மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்த முக்கிய 5 கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படுவதும், சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுமான மொஹமட் ஷிரான் பாசிக், டுபாயில் இருந்து கடந்த 14ஆம் திகதி இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் கடந்த மே 26ஆம் திகதி டுபாய் பாதுகாப்புப் படையினரால் அந்நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |