பிரதி சபாநாயகராக இன்று முதல் பதவி வகிக்க போவதில்லை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு
பிரதி சபாநாயகராக இன்று ஞாயிற்றுக்கிழமை (01) முதல் பதவி வகிக்க போவதில்லை. என சுதந்திர கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியமை, நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமை உள்ளிட்ட காரணிகளை ஆராய்ந்து பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலக தீர்மானித்தேன்.
பதவி விலகல் தீர்மானத்தை அரச தலைவர் ஏற்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது.
நிபந்தனைகளின் அடிப்படையில் இன்று வரை பிரதிசபாநாயகர் பதவி வகிக்க இணக்கம் தெரிவித்தேன்.
எதிர்வரும் வாரம் நாடாளுமன்றம் கூடும் போது புதிய பிரதி சபாநாயகர் தெரிவு குறித்து ஆளும் தரப்பு அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
