சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டும் - சாகல ரத்னாயக்க
சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணும் நோக்கில் அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்க தலைமையில் விசேட கூட்டம் நேற்று (9) இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகணரங்களின் பற்றாக்குறை மருந்துகளின் தரம் மற்றும் கொள்வனவு செயற்பாட்டில் உள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
சுகாதார அமைச்சு

நாட்டின் சுகாதாரத்துறைக்குள் அவசர கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலுயுறுத்திய சாகல ரத்னாயக, நெருக்கடிகள் தொடர்பிலான ஊடக அறிக்கைகளின் உண்மை தன்மையை ஆராயுமாறு வலியுறுத்தினார்.
குறித்த குற்றச்சாட்டுக்களில் ஏதேனும் உண்மை என கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ உடனடியாக தலையிட்டு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சுகாதார அமைச்சின் அலட்சியப்போக்கு நோயாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதனை மன்னிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்