வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?
கறிவேப்பிலையில் அதிகளவு ஆல்கலாய்ட்ஸ், க்ளைகோசைட்ஸ் மற்றும் பீனாலிக் கலவைகள் உள்ளதாக பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவை பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் பரவும் நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை பல வகையான நோய்கள் தாக்குவதிலிருந்து நம்மை காக்கிறது. முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள மருந்தாக கறிவேப்பிலை திகழ்கிறது.
ஒருவர் தினமும் 5-10 கறிவேப்பிலை சாப்பிடுவதால் அவருக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்தg; பதிவில் தெரிந்துகொள்வோம்.
📌 இரும்புச்சத்து
ஆண்டி ஆக்ஸிடெண்ட், விற்றமின் ஏ, விற்றமின் பி, விற்றமின் சி, கல்சியம், பொஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற நம் உடலுக்கு தேவையான பல சத்துகள் கறிவேப்பிலையில் நிறையவே உள்ளது.
நமது வயிற்றில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கும் மருந்தாக கறிவேப்பிலை இருக்கிறது.
கறிவேப்பிலையை சாப்பிடுவதால் உடல் வீக்கம் குறைகிறது. இதுபோன்ற வீக்கங்கள் தான் நாட்பட்ட நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
📌 செரிமானம் மேம்படும்
தினமும் 5-10 கறிவேப்பிலையை சாப்பிடுவதால் ஒருவரின் செரிமானம் மேம்படுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கறிவேப்பிலையில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
அதேபோல் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களும் கறிவேப்பிலையை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். கறிவேப்பிலையில் அதிகளவு தாவர கலவைகள் உள்ளதால் பல நோய்களிலிருந்து இவை நம்மை காக்கிறது.
கறிவேப்பிலையில் அதிகளவு ஆல்கலாய்ட்ஸ், க்ளைகோசைட்ஸ் மற்றும் பீனாலிக் கலவைகள் உள்ளதாக பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவை பக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் பரவும் நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. சுருக்கமாக சொன்னால் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளிலிருந்து நம் உடலை கறிவேப்பிலை பாதுகாக்கிறது.
📌 விட்டமின் மற்றும் தாதுக்கள்
ஃப்ரீ ரேடிகல்ஸுக்கு எதிராக சக்திவாய்ந்த பாதுகாப்பு கவசமாக கறிவேப்பிலை திகழ்கிறது. இந்த ஃப்ரீ ரேடிகல்ஸ் நமது உடலில் தீவிர பாதிப்புகளை உண்டாக்கும் வல்லமை படைத்தது.
தினமும் கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் குறைகிறது. விற்றமின் மற்றும் தாதுக்கள் தவிர்த்து பல எசென்ஷியல் எண்ணெய்களும் கறிவேப்பிலையில் உள்ளது.
இந்த எண்ணெய்கள் உடலில் உள்ள வீக்கத்தை குறைத்து நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் நம் இதய நலன் மேம்படுகிறது.
📌 இதய ஆரோக்கியம்
இதனால் நம் இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் வரும் ஆபத்து குறைகிறது. அதுமட்டுமன்றி நமது மூளைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது கறிவேப்பிலை.
இது நம் நரம்பு மண்டலத்தை பாதுகாத்து அல்சைமர் போன்ற நோய் வராமல் காக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள இன்னொரு விசேடமான குணம், இதை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.
ஒருவகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக கறிவேப்பிலை செயற்படுகிறது.
இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்தி ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |