தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் வேகன்ஆர் ரக கார் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று (10) இரவு பெலியஅத்த, குடாஹில்ல ஜயமாவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இந்த காரை அவர் வாங்கியுள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீவைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
தீ விபத்தில் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

தீயினால் ஏற்பட்ட இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்