சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம்! இறுதி தீர்மானம் இன்று
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்று (27) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை வழங்குவதற்கு நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் 72 சுகாதார சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்காகவே இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டதாக கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
போராட்டம் தொடரும்
கடந்த 19 மற்றும் 20ஆம் திகதிகளில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது, சுகாதார செயலாளர் நிதியமைச்சுடன் கலந்துரையாடினார்.
இதன்போது தீர்வு காண்பதற்கு பத்து நாட்கள் அவகாசம் கேட்டதால், கூட்டமைப்பு தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை இடைநிறுத்தியது.
இந்த நிலையில் அந்தக் கால அவகாசம் நாளையுடன் (28) முடிவடைவதால், சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதி வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அனுமதி வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுமாயின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |