மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்
இலங்கையில் நாளை மறுதினம் (19) முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை, தமக்கும் வழங்குமாறு கோரி, இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இதற்கு முன்னர், குறித்த கொடுப்பனவை கோரி, சுகாதார தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள்
இதன்போது அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து தற்காலிகமாக தமது தொழிற்சங்க போராட்டத்தை சுகாதார தொழிற்சங்கத்தினர் கைவிட்டிருந்தனர்.
எனினும், குறித்த விடயத்தில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படாததினால், நாளை மறுதினம் முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
