இலங்கையில் தீவிரமடையும் வெப்ப நிலை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையின் பல பிரதேசங்களில் நாளை (4) வெப்ப நிலை தீவிரமடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்துக்குரிய அளவில் இருக்கும் என அந்த திணைக்களம் எச்சரித்துள்ளது.
வெப்பமான காலநிலை
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்தது.
இதற்கமைய, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வெப்ப நிலை நாளைய தினம் மேலும் அதிகரிக்கக் கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்த வரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


