உலகுக்கு எச்சரிக்கை மணி - வெப்ப அலையில் தகிர்க்கும் ஐரோப்பா: பாடசாலைகளுக்கு பூட்டு
காலநிலை மாற்றத்தின் விளைவாக, ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வாட்டிவதைத்து வருகின்றது.
பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை 40°C-ஐத் தாண்டி பதிவாகி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் கோடை வெப்பம் அல்ல; காலநிலை மாற்றத்தின் தீவிரமான எச்சரிக்கை மணி" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்பத்திற்குக் காரணம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அதீத வெப்பத்திற்குக் காரணம்
பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், நாட்டின் 3-ல் ஒரு பகுதிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடும் வெப்பத்தால் பிரான்ஸில் 845 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகல் நேரங்களில் வெளியில் செல்வது ஆபத்தானதாக மாறியுள்ள நிலையில், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில்,வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் எளிதில் நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு ஆளாவதைத் காணக்கூடிய நிலையில் இருப்பதால், பொது இடங்களில் மது அருந்துதல், பல ரயில்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கு பிரான்ஸ் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
பாதுகாக்க மீட்பு
இதேவேளை , தென்கிழக்கு பிரான்சின் கார்பென்ட்ராஸ் (Carpentras) நகரில் ஒரு குடியிருப்புப் பகுதி வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடும்பக் காரின் உள்ளே, 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் அரசு வழக்கறிஞர் ஹெலன் மோர்கஸ் (Helene Mourges), “குழந்தைகளின் மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பிரான்சில் நிலவும் மிகக் கடுமையான வெப்ப அலையே இந்த மரணத்திற்கு முதன்மைக் காரணியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது” என்று முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |