பிமல் நீங்களா சபாநாயகர்! தயாசிறியின் கேள்வியால் சபையில் காரசார மோதல்
நாட்டிற்கான எரிசக்தி கொள்வனவு மற்றும் நட்டங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நிலையியல் கட்டளையின் பிரகாரம் எழுப்பப்ட்ட கேள்வி குறித்து பிமல் ரத்நாயக்க குறிக்கிட்டு தனது கருத்துக்களை முன்வைக்க வந்த சந்தர்ப்பாத்தில் மேற்படி கருத்து மோதர் ஏற்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற அமர்வுகளை நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடத்துவது மற்றும் நேர முகாமைத்துவம் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இஸ்லாத்திற்கு எதிரான இறைநிந்தனை பௌத்த மதத்துடன் ஒத்துப்போகாது! ஞானசார தேரருக்கு நீதிமன்றில் கடும் எச்சரிக்கை
குறுக்கீடுகளுக்குக் கடும் எதிர்ப்பு
அமர்வுகளை மாலை 6.30 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டியுள்ளதைச் சுட்டிக்காட்டியதுடன், சபையில் வீண் குழப்பங்களை ஏற்படுத்தாமல் நிலையியற் கட்டளைகளுக்கு அமையச் செயற்படுமாறு சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்.

சபை முதல்வரின் இந்தத் தலையீட்டினால் ஆத்திரமடைந்த தயாசிறி ஜயசேகர, "நீங்களா சபாநாயகர்? இன்று சபாநாயகர் இவர் " எனக் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பினார்.
தனக்குரிய கேள்விகளைக் கேட்பதற்கு இடமளிக்குமாறு கோரிய அவர், சபை முதல்வரின் குறுக்கீடுகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதன் போது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் தயாசிறி ஜயசேகரவும் ஒருவரையொருவர் அமருமாறு கூறி வாதிட்டதால் சபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |