அம்புலன்ஸ் சாரதி மீது கடும் தாக்குதல்
Hambantota
Sri Lanka
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Sumithiran
ஹம்பாந்தோட்டை கட்டுவெவ பிரதேசத்தில் அம்புலன்ஸ் சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹம்பாந்தோட்டை தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கட்டுவெவ பகுதியிலுள்ள வீடொன்றில் அம்புலன்ஸ் சாரதி மற்றுமொரு பெண்ணுடன் இருந்த போது குறித்த பெண்ணின் கணவர் சம்பவ இடத்திற்கு வந்து அம்புலன்ஸ் சாரதியை மன்னா கத்தியால் தாக்கியதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அம்புலன்ஸ் சாரதி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பணிபுரிவதாகவும், குறித்த பெண் அதே வைத்தியசாலையில் துப்புரவுப் பணியாளராக கடமையாற்றுவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி