வெள்ளத்தில் சிக்கிய பேருந்து - தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்
By Thulsi
வெள்ளத்தில் சிக்கிய பேருந்து ஒன்றில் இருந்து 23 பயணிகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை - கொழும்பு பிரதான சாலையில் கும்புக்கனையில் இன்று (27) காலை 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
ஆனால் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து, ரங்கா ஹோட்டலுக்கு அருகிலுள்ள பாலத்தைக் கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு நீர்மட்டம் ஆறு அடிக்கு உயர்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அப்பகுதியில் டிராக்டர்களின் உதவியுடன், பேருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
23 பயணிகளும் காயமின்றி தப்பியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 2 மணி நேரம் முன்
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம்
21 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்