மக்களே அவதானம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் ஐந்து மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலேயே வெப்பநிலை அதிகரிக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28-07-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதன்படி பிற்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில பகுதிகளில் அதிகரித்துக் காணப்பட வாய்ப்புள்ளது.

இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை இன்று (28) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைப் பொழிவு சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |