கனடாவில் தூதரகம் அருகில் துப்பாக்கிச் சூடு - குறி வைக்கப்படும் அமெரிக்கர்கள்
கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததுள்ளது.
“அப்பகுதியில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாகவும், ஒரு வெள்ளை நிற செடான் கார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வது காணப்பட்டதாகவும்” டொராண்டோ காவல்துறை X தள பதிவில் தெரிவித்தது.
அடையாளம் காணப்படவில்லை
அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு, வெற்றுத் தோட்டா கண்டெடுக்கப்பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சந்தேக நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் இந்தக் கட்டிடத்தை இலக்கு வைத்து பல துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
டொராண்டோ பகுதியில் உள்ள யூத தொழுகைக்கூடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்தே இச்சம்பவமும் இடம்பெற்றிருந்தது.
பலப்படுத்த பாதுகாப்பு
இதன் காரணமாக, கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் முன்பாகப் பாதுகாப்பைப் பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

டொராண்டோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து, யூத தொழுகைக்கூடங்கள், யூத பாடசாலைகள் மற்றும் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
மார்ச் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அந்த நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |