உலுக்கும் சீரற்ற காலநிலை - யாழில் காற்றுடன் தொடர் மழை - ஒருவர் பலி
புதிய இணைப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மருதங்கேணியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்தோணி பெர்னான்டோ என்ற 66 வயது மதிக்கத்தக்க முதியவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நெடுந்தீவு மற்றும் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இருவரும் அனர்த்தத்தில் காயமடைந்துள்ளனர்.
செய்தி - பிரதீபன்
முதலாம் இணைப்பு
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியின் கரையோரங்களில் என்றுமில்லாதவாறு மழை வெள்ளம் அதிகரித்து காணப்படுகின்றது.

பல இடங்களில் கடலும் தரையும் ஒன்றாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, கடற்றொழிலாளர் படகுகள் உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி - எரிமலை

இடைத்தங்கல் முகாம்
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1598 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 11 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொன்னாலை - காரைநகர்
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பொன்னாலை - காரைநகர் வீதியில் கடல் நீர் வீதிக்கு வருகின்னது.
அத்தோடு காற்றின் வேகம் அதிகமாக இருப்பதனால் கீரிமலை கடல் பகுதி கொந்தளிப்புடனும் இருக்கின்றது.
செய்தி - தீபன்
கொடிகாமம் மிருசுவில்
தென்மராட்சி கொடிகாமம் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஏ9 வீதியோரமாக நின்ற மரம் ஒன்று இன்று அதிகாலை வேருடன் சாய்ந்து வீதிக்கு குறுக்காக விழுந்திருந்தது இதனால் வீதியில் ஒரு வழிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



