மட்டக்களப்பில் பெய்த கன மழை : வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகள்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த காரணமாக கிரான் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதனால் கிரான் பாலம் ஊடான பிரதான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து சேவையினை தொடர்ந்து ஆறாவது நாளாக (05.03.2025) கடற்படையினரின் உதவியுடன் இராணுவமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான பாதை
அண்மையில் பெய்த மழை காரணமாக கிரான் பிரதேசத்தில் உருவான காட்டு வெள்ளம் தற்போது ஓரளவு குறைந்துள்ள போதிலும் அப்பகுதியிலுள்ள மக்கள் நேற்று வரை ஆபத்தான பாதையின் ஊடாகவே தங்களது பிரயாணங்களை மேற்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போது இப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதனால் இப்பகுதி விவசாயிகள் தங்களது துவிச்சக்கர வண்டிகளையும் முக்கிய அத்தியாவசிய உபகரணங்கள், உடமைகள் என்பவற்றை தோளில் சுமந்தவாறு பயணிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் சிறுவர்கள், பெண்கள், நோயாளிகளின் நலன் கருதி இப்பகுதி இராணுவத்தினரின் உதவியுடன் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் படகுச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
