நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-10-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாண கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
பனிமூட்டமான நிலை
அதேவேளை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |