இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16-05-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது.
பனிமூட்டமான நிலை
மேற்கண்ட பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவில் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் பல சுற்று மழை பெய்யும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |