இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைய பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டளவியல் திணைக்களம் இன்று (04-02-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இதனடிப்படையில், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |