உக்ரைன் போரில் கடும் பின்னடைவு - புடினின் அதிரடி முடிவு
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு
உக்ரைனில் அண்மைய நாட்ளாக ரஷ்ய படை பெரும் பின்னடைவை சந்ிதுள்ள நிலையில் அதிபர் புடின் அதிரடியான மாற்றமொன்றை செய்துள்ளார்.
இதன்படி தாக்குதலை வழிநடத்த புதிய படைத்தளபதியை அவர் நியமித்துள்ளார்.
"சிறப்பு இராணுவ நடவடிக்கையின் பகுதிகளில் கூட்டுப் படைகளின் தளபதியாக" ஜெனரல் செர்ஜி சுரோவிகின் (Sergey Surovikin) நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தளபதி நியமனம்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத்தளத்தின்படி, சைபீரியாவின் Novosibirsk-ல் பிறந்த 55 வயதான சுரோவிகின், 1990-களில் தஜிகிஸ்தான் மற்றும் செச்சினியாவில் நடந்த மோதல்களில் போர் அனுபவம் பெற்றவர், மேலும் 2015-ல் பஷர் அல்-அசாத்தின் சார்பாக சிரியாவில் ரஷ்யா தலையிட்டபோது முக்கிய நபராக இருந்துள்ளார்.
ஜூலை மாதம் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சுரோவிகின் உக்ரைனில் "தெற்கு" படைகளை வழிநடத்தி வந்தவர் ஆவார். அவரது முன்னோடியின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை, ஆனால் சில ரஷ்ய ஊடகங்கள் அது இரண்டாம் செச்சென் போரின் ஜெனரல் மற்றும் சிரியாவில் ரஷ்ய தளபதியாக இருந்த ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ் என்று கூறுகின்றன.
