அமெரிக்காவின் பிரபல சுற்றுலா கடற்கரையில் நிகழ்ந்த அனர்த்தம் (வீடியோ)
us
Helicopter crashes
Miami Beach
By Sumithiran
அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி உள்ளது.
சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானதும் நெரிசல் மிக்கதுமான இந்தப்பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்றவேளை பெருமளவான சுற்றுலா பயணிகள் நீராடிக் கொண்டிருந்தனர்.
ஹெலி விழுந்ததும் அதனை மீட்க பலரும் நீந்திச் சென்றமை அந்த வீடியோவில் காணக்கூடியதாக இருந்தது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்