இஸ்ரேல் பிரதமராகிறார் காடி ஐசன்:கூட்டணி கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள்

Benjamin Netanyahu Israel Election
By Sindu Nov 10, 2026 05:00 AM GMT
Report

இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தலில் எந்​தக் கூட்​ட​ணிக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத சூழலில் யஷார் கட்​சித் தலை​வர் காடி ஐசன்​கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்​சாக் அழைப்பு விடுத்​துள்​ளார்.

கடந்த ஒக்​டோபர் 27ஆம் திகதி இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தல் நடை​பெற்​றது. மொத்​தமுள்ள 120 தொகுதி​களில் ஆட்​சி​யமைக்க 61 இடங்​களைக் கைப்​பற்ற வேண்​டும். இந்த தேர்​தலில் ஒட்​டுமொத்​த​மாக ஆளும் லிகுட் கூட்​ட​ணிக்கு 53 இடங்​கள் கிடைத்​தன.

ஒட்​டுமொத்​த​மாக டுகெதர் கூட்​ட​ணிக்கு 48 இடங்​கள் கிடைத்​தன. இஸ்ரேலை சேர்ந்த அரபு கட்​சிகளின் கூட்​ட​ணி​யான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்​களை​யும் மற்​றொரு அரபு கூட்​ட​ணி​யான ராஆம் 8 இடங்​களை​யும் கைப்​பற்​றின.

சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்

சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்

6 வாரங்களுக்குள் பெரும்பான்மை

இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தலில் எந்​தக் கூட்​ட​ணிக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத சூழலில் யஷார் கட்​சித் தலை​வர் காடி ஐசன்​கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்​சாக் நேற்று முன்​தினம் அதி​காரப்​பூர்​வ​மாக அழைப்பு விடுத்​தார்.

இஸ்ரேல் பிரதமராகிறார் காடி ஐசன்:கூட்டணி கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள் | Herzog Tasks Gadi Eisenkot To Form Government

அடுத்த 6 வாரங்​களுக்​குள் ஆட்சி அமைத்து பெரும்​பான்​மையை நிரூபிக்கவும் அறி​வுறுத்தி உள்​ளார்.

இந்த சூழலில் காடி ஐசன்​கோட் கூறிய​தாவது: நாம் இப்​போது அவசரகால சூழலில் உள்​ளோம். இதை புரிந்து கொண்டு எங்​களது கூட்​டணி அரசில் லிகுட் கட்சி மற்​றும் ஆளும் கூட்​டணி கட்​சிகள் இணை​ய​ அழைப்பு விடுக்​கிறேன். நாம் ஒன்​றிணைந்து தேசிய எமர்​ஜென்சி அரசை அமைக்​கலாம்.

ஆனால் என்னை பிரதம​ராக ஏற்​றுக் கொள்​ளும் கட்​சிகள் மட்​டுமே கூட்​ட​ணி​யில் இணைக்​கப்​படும். எங்​கள் கூட்​ட​ணி​யின் 4 முக்​கிய நிபந்​தனைகளை​யும் ஏற்​றுக் கொள்ள வேண்​டும். அதாவது இஸ்ரேலை யூத ஜனநாயக நாடாக அங்​கீகரித்து ஏற்​றுக்கொள்ள வேண்​டும்.

வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறிய இரும்பு தொழிற்சாலை: 17 பேர் உயிரிழப்பு

வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறிய இரும்பு தொழிற்சாலை: 17 பேர் உயிரிழப்பு

4 நிபந்தனைகள்

இஸ்ரேலின் 1948ஆம் ஆண்டு சுதந்​திர தின அறி​விப்பை ஏற்​றுக்கொள்ள வேண்​டும். அனைத்து தரப்​பினரும் கட்​டாய​மாக ராணுவ பயிற்சி பெற வேண்​டும். ஹமாஸ் அமைப்பை தீவிர​வாத குழு​வாக அறி​விக்க வேண்​டும்.

இஸ்ரேல் பிரதமராகிறார் காடி ஐசன்:கூட்டணி கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள் | Herzog Tasks Gadi Eisenkot To Form Government

இந்த 4 நிபந்​தனைகளை ஏற்​றுக் கொண்​டால் மட்​டுமே எங்​கள் கூட்​ட​ணி​யில் இணை​ய​லாம். இவ்​வாறு காடி ஐசன்​கோட்                  தெரி​வித்​துள்​ளார்.

ஜாயின்ட் லிஸ்ட் மற்​றும் ராஆம் ஆகிய இரு அரபு கூட்​ட​ணிகள், காடி ஜசன்​கோட்​டின் கூட்​டணி அரசில் இணை​யாமல் வெளி​யில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்​துள்​ளன. எனினும் அரபு கூட்​ட​ணிகளின் ஆதரவு இன்றி பிரதமர் நெதன்​யாகு​வின் லிகுட் கட்சி மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகளை புதிய அரசில் இணைக்க காடி ஐசன்​கோட் தீவிர முயற்சி செய்து வரு​கிறார்.

இஸ்ரேலின் புதிய பிரதம​ராக பத​வி​யேற்க உள்ள காடி ஐசன்​கோட் கடந்த 2015 முதல் 2019 வரை அந்த நாட்​டின் ராணுவ தளப​தி​யாகப் பதவி வகித்​தார்.

நாட்டில் அதிகரித்துள்ள கொலைகள்:மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் சிறுவன் உயிரிழப்பு

நாட்டில் அதிகரித்துள்ள கொலைகள்:மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் சிறுவன் உயிரிழப்பு

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் - எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் - எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026