அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்ட அறிவிப்பு
அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் திட்டம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்குவது உள்ளிட்ட ஈரானின் ஏழு நிபந்தனைகள் அடங்கிய திட்டத்தை வாஷிங்டன் நடைமுறை ரீதியாக ஏற்கும் வரை இந்நிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு
இந்தநிலையில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
அமெரிக்கா இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க முன்வந்தாலும் தங்களின் முக்கியக் கோரிக்கைகளை அமெரிக்கா முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்றும் அளிக்கப்பட்ட பதில்கள் போதுமானதாக இல்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தம் மூலம் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதிலும் ஏழு நிபந்தனைகளையும் அமெரிக்கா முழுமையாகவும் தெளிவாகவும் ஏற்றுக்கொண்டு செயல்படும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்றும் அமெரிக்காவுடன் நேரடி ஒப்பந்தம் சாத்தியமில்லை என்றும் ஈரான் அரசு தெளிவாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : உக்ரைன் போரில் நான்கரை இலட்சம் வீரர்கள் பலி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |