சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி
அநுராதபுரம் புனித பூமியில் பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் இணைந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை மருத்துவப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில், புனித நகரத் திட்டமிடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை அகற்றுவதற்கு காவல்துறையினர் முயற்சித்தபோது அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன், மோதல் சம்பவமும் இடம்பெற்றது.
இதன்போது, காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ருவன்வெலிசாய விகாரை
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரே ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியுள்ளமை மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

'தஹம் பிரசாத்' என அழைக்கப்படும் பலதுர ரங்கிரியலாகே பிரசாத் சுசந்த ஜயசிறி என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |