தீபாவளி தினத்தன்று நடந்த கொடூரம்:மஸ்கெலியாவில் இளைஞர் கொலை
Nuwara Eliya
Death
Murder
By Sindu
மஸ்கெலியா, நல்லதண்ணி காவல் பிரிவுக்குட்பட்ட புதுக்காடுவத்தை பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர், மஸ்கெலியாவின் மரேவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஆவார்.
நேற்று இரவு (08) இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கொலை நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது
மேலும், பாதிக்கப்பட்டவரின் தந்தை இச்சம்பவத்தில் காயமடைந்து, தற்போது மஸ்கெலியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் 29 வயது சந்தேக நபர் ஒருவர் நல்லதண்ணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி