TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை

Sri Lanka TIN Number
By Pavi Nov 09, 2026 09:15 AM GMT
Report

இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களில் மேலும் சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைப் பெற்று பதிவு செய்ய வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றின் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுவரை சுமார் 1.3 கோடி பேர் TIN இலக்கத்தைப் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளதாகவும், இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.7 கோடியாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண்ணை கடத்தி பாலியல் அத்துமீறல்

சவூதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண்ணை கடத்தி பாலியல் அத்துமீறல்

சட்ட ஏற்பாடு

இதன்படி, 40 இலட்சம் பேர் TIN இலக்கத்தைப் பெற்று பதிவு செய்ய வேண்டியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை | Tin Number Sri Lanka Goverment 4 Million People

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “தற்போது சுமார் 1.3 கோடி பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெறுவதற்காகத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.

இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்த சுமார் 1.7 கோடி பேர் உள்ளனர்.

மேலும் 40 இலட்சம் பேர் பதிவு செய்ய வேண்டியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் சில அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எனினும், சட்டத்தின்படி 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவரும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் பலரிடையே தேவையற்ற அச்சம் நிலவுகிறது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. வரி செலுத்த வேண்டிய வருமான வரம்பை அடையாதவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

வரி முறைமையை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே இந்தச் சட்ட ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூவாயிரம் கோடிக்கும் அதிக நட்டத்தை சந்தித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்

மூவாயிரம் கோடிக்கும் அதிக நட்டத்தை சந்தித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்

திருகோணமலையில் நீரில் மூழ்கிய தாழ்நில பகுதிகள்:இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருகோணமலையில் நீரில் மூழ்கிய தாழ்நில பகுதிகள்:இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026