யாழில் மாணவனை தாக்கிய அதிபர் : தாய் குற்றச்சாட்டு : அதிபர் மறுப்பு

Jaffna School Incident
By Theepan Nov 09, 2026 04:06 PM GMT
Report

யாழ் வலிகாம் வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தாக்கி ய பின்னர் முச்சக்கர வண்டியில் வீதியில் இறக்கி விட்டதாக மாணவனின் தாய் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தனது மகன் பாடசாலைக்கு நேரம் தாழ்த்தி சென்ற காரணத்தினால் ஆசிரியர் குப்பையள்ளுமாறு தண்டனை வழங்கினார்.

 தனது மகன் குப்பையை குனிந்து அள்ளும்போது அணிந்திருந்த சேட் வெளியே வந்தபோது ஆசிரியர் சேட்டை உள்ளே விட தெரியாதா என கேட்டு முதுகில் குத்தினார்.

 நீ பாடசாலையில் படிப்பதற்கு தகுதி இல்லை

அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு ஆசிரியர் நீ சண்டியனா என கேட்டு அவரும் முதுகில் கையால் குத்தி விட்டு அதிபரிடம் அழைத்துச் சென்றார்கள்.

யாழில் மாணவனை தாக்கிய அதிபர் : தாய் குற்றச்சாட்டு : அதிபர் மறுப்பு | Principal In Jaffna Assaulting A Student

அதிபர் நீ பாடசாலையில் படிப்பதற்கு தகுதி இல்லை என அவரும் முதுகில் கையால் அடித்து விட்டு இரண்டு ஆசிரியர்களுடன் பாடசாலை நேரத்தில் மாணவனை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி எனது கடைக்கு அருகாமையில் இறக்கிவிட்டு சென்றனர்.

மகன் நடந்தவற்றை என்னிடம் கூறினார் முதுகு நோவதாக தெரிவித்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தேன் . வைத்தியசாலையில் இருந்து வருகை தந்த மகன் பாடசாலை செல்லவில்லை வீட்டில் விபரீத முடிவிற்கு முயற்சிப்பதாக என்னுடைய இன்னொரு மகன் தொலைபேசி மூலம் எனக்குத் தெரியப்படுத்தினார்.

ஞானசார தேரருக்கு துறவற ஆடை : சிறைச்சாலை ஆணையாளருக்கு பறந்த கோரிக்கை

ஞானசார தேரருக்கு துறவற ஆடை : சிறைச்சாலை ஆணையாளருக்கு பறந்த கோரிக்கை

அதிபர் மறுப்பு

நான் கடையில் நின்று வீடு சென்றேன் மகனிடம் என்ன நடந்தது என கேட்டபோது பாடசாலையில் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் நான் சாகப் போறேன் என என்னிடம் கூறினார் என்றார்.

யாழில் மாணவனை தாக்கிய அதிபர் : தாய் குற்றச்சாட்டு : அதிபர் மறுப்பு | Principal In Jaffna Assaulting A Student

குறித்த விடையம் தொடர்பில் அப் பாடசாலை அதிபரை எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது மாணவனுக்கு தாங்கள் அடிக்கவில்லை எனவும் பாடசாலை முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறினார்.

ஏன் பாடசாலை நேரத்தில் மாணவனை வீட்டுக்கு அனுப்பினீர்கள் என கேட்டபோது பெற்றோரை அழைத்து வருமாறு பல தடவை மாணவனுக்கு கூறியும் அழைத்து வராத காரணத்தினால் அழைத்து வருவதற்காக அனுப்பினோம் என்றார். 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்குக : அரசுக்கு இடித்துரைக்கும் ஐ.நா நிபுணர்கள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்குக : அரசுக்கு இடித்துரைக்கும் ஐ.நா நிபுணர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026