பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்குக : அரசுக்கு இடித்துரைக்கும் ஐ.நா நிபுணர்கள்

United Nations Government Of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Jaso Nov 09, 2026 02:26 PM GMT
Report

 முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை (PSTA) சர்வதேச மனித உரிமைகள் தரங்களுடன் முழுமையாக சீரமைக்கும் வகையில் திருத்தியமைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"இலங்கையில் 26 ஆண்டுகள் நீடித்த கொடூரமான உள்நாட்டுப் போருக்கு முன்னரும், போரின் போதும், போருக்குப் பின்னரும், சிறுபான்மையினர், மனித உரிமைப் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியோருக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் உட்பட, சித்திரவதை மற்றும் கட்டாயக் காணாமல் போதல் போன்ற பல கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான முன்மொழிவை நாங்கள் வரவேற்கிறோம்," என்று நிபுணர்கள் கூறினர்.

சட்டமூலத்தில் சில முக்கிய கவலைகள்

இலங்கை அரசாங்கம் PSTA-வின் மிகவும் மேம்படுத்தப்பட்ட சமீபத்திய வரைவை முன்வைத்துள்ளது என்பதை அவர்கள் குறிப்பிட்டனர், ஆனால் குறித்த சட்டமூலத்தில் சில முக்கிய கவலைகள் இன்னும் நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் வலியுறுத்தினர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்குக : அரசுக்கு இடித்துரைக்கும் ஐ.நா நிபுணர்கள் | Un Experts Urge Sri Lanka Revise Anti Terror Law

 மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு மட்டுமே பயங்கரவாதத்தின் வரையறையைச் சுருக்குதல், கைது மற்றும் தேடுதலுக்கான இராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்துதல், தடுப்புக் காவல் உத்தரவுகள் உடனடி நீதித்துறை மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்தல், மற்றும் கட்டுப்படுத்தும் முடிவுகளைக் கொண்ட உண்மையான சுதந்திரமான மறுஆய்வுக் குழுவை நிறுவுதல் ஆகியவை முக்கிய பரிந்துரைகளில் அடங்கும்.

அநுரவின் கைகளை சென்றடையவுள்ள இரகசிய தீர்மானம்!

அநுரவின் கைகளை சென்றடையவுள்ள இரகசிய தீர்மானம்!

மனித உரிமைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியம்

சித்திரவதை அல்லது கொடுமைப்படுத்துதல் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களை முழுமையாக விலக்குதல், பத்திரிகை ஆதாரங்கள் மற்றும் தொழில்முறை இரகசியத்தன்மைக்கான பாதுகாப்புகள், மற்றும் தவறான செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கான விலக்குரிமைகளை நீக்குதல் உள்ளிட்ட கடுமையான நடைமுறைப் பாதுகாப்புகளுக்கும் நிபுணர்கள் அழைப்பு விடுத்தனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்குக : அரசுக்கு இடித்துரைக்கும் ஐ.நா நிபுணர்கள் | Un Experts Urge Sri Lanka Revise Anti Terror Law

பயனுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மனித உரிமைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய ஐ.நா. நிபுணர்கள், சட்டமூத்தை செம்மைப்படுத்த அரசாங்கத்திற்கு உதவ தொழில்நுட்ப உதவியை வழங்கதயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து ஏவப்பட்ட செயற்கைகோளுக்கும் நிலக்கரி இறக்குமதி மோசடிக்கும் தொடர்பு

இலங்கையில் இருந்து ஏவப்பட்ட செயற்கைகோளுக்கும் நிலக்கரி இறக்குமதி மோசடிக்கும் தொடர்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026