சவூதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்
சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்துவிட்டு தாயகம் திரும்யிய பெண்ணை முல்லைதீவில் கடத்தி தவறான முறையில் நடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட பெண் 33 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் எனவும் அவர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில் திட்டமிட்டுக் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
நண்பியின் பொதியை (பார்சல்) கொடுப்பதற்காகச் சென்ற இந்த பெண், வாடகை வாகனச் சாரதி மற்றும் அவரோடு இணைந்த கும்பலால் போதைப்பானம் கொடுக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையிலேயே இந்தத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியூட்டும் சம்பவம்
அத்தோடு அவரிடமிருந்த 13 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், குறித்த பெண் தவறான முறையில் நடத்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் வீசப்பட்டுள்ளார்.
மயக்கமடைந்த நிலையில் இருந்த குறித்த பெண், காவல்துறையினரால் மீட்கப்பட்டுத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் நினைவு திரும்பியதைத் தொடர்ந்து வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் வழிகாட்டலில் முல்லைத்தீவு காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதில் உள்ள பேராபத்துகள் குறித்தும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |