கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வு பணியகத்தில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் இன்று (9) முற்பகல் முன்னிலையாகியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றமை, மற்றும் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியல் நீடிப்பு
இம் மாதம் 11ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அதுதொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வு பணியகத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |