நாட்டிலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (09) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, கிழக்கு, மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி நடவடிக்கைகள்
இந்த விடுமுறை தொடர்பான அறிவுறுத்தல்களை குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.

எனினும், இந்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகளில் வழமை போன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் இன்றைய தினம் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |