யாழ்.தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை கையளிக்குமாறு மக்கள் போராட்டம்
Jaffna
Northern Province of Sri Lanka
Protest
By Theepan
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்றைய தினம் (09) மழைக்கு மத்தியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டியில், தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி, எவ்வித அனுமதிகளும் இன்றி விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையை அகற்றி, காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க கோரி நீண்ட காலமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டம்
இந்நிலையில், குறித்த விகாரையில், மத சடங்கு ஒன்று இன்றைய தினம் மிக பெரியளவில் நடைபெற்றுதுடன், அதற்காக தென்னிலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கானோர் அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது, விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி